OTT-இல் மிஸ் பண்ணிடாத தரமான காமெடி படங்கள்..!! சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது..!!
இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்கான மிகப்பெரிய ஊடகமாக ஓடிடி மாறிவிட்டது. ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளத்தில் புதிய வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், ஓடிடியில் நீங்க மிஸ் பண்ணிடவே கூடாத சிறந்த காமெடி படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கேங் ஓவர் : கடந்த 2009இல் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் ஆங்கிலத்தில் எந்த அளவிற்கு காமெடியாக உள்ளதோ அதே அளவிற்கு தமிழ் டப்பிங்கிலும் காமெடியாக உள்ளது. இந்த படத்தில் வரக்கூடிய ஆலன் கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இது நெட் ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ஓடிடி தளத்தில் உள்ளது.
பேட் பாய்ஸ் : பிரபல பாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் மார்டின் லாரன்ஸ் நடிப்பில் 1995இல் வெளியான பேட் பாய்ஸ் திரைப்படம் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாகும். மைக்கேல் பே இயக்கிய இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளதுடன் நெட் ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் இருக்கிறது.
கிளிக்: கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், ஹீரோவிடம் கிடைக்கும் ரிமோட் மூலம் அவன் செய்யும் சாகசமே இப்படத்தின் கதையாகும். இந்த ரிமோட் மூலம் கடந்த காலத்திற்கு செல்ல முடிவதோடு எந்தவொரு நபரையும் ஃப்ரீஸ் செய்ய முடியும். படம் முழுக்க காமெடி இருப்பதால் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்தினை நெட்ஃபிளிக்ஸ், அமேசான் தளத்தில் காணலாம். படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளதால் நீங்கள் தமிழிலும் பார்க்கலாம்.
டாக்டர் டூ லிட்டில் : கடந்த 1998ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் 5 பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாகங்களும் வெவ்வேறு விதமான கதையம்சங்களை கொண்டவை. விலங்குகள் பேசுவதை கேட்கும் திறனுள்ள டாக்டரின் கதையே படமாகும். ஸ்டீவ் கார் இயக்கியுள்ள இந்த படத்தில் மிருகங்கள் செய்யும் சேட்டைகளை டாக்டர் எப்படி தடுக்கின்றார் என்பதே கதை. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் அமேசான் பிரைமிலும் தமிழ் டப்பிங்கில் உள்ளது.
ஷாலின் ஷாக்கர் : ஸ்டீபன் ஸ்டோவ் இயக்கி 2001இல் வெளியான இப்படம் ஒரு சீன மொழி படமாகும். கால்பந்தை சிறப்பாக விளையாடும் கதாநாயகன் நண்பர்களை ஒன்று சேர்த்து சிறந்த அணியை தோற்கடிப்பதே படத்தின் கதை. நகைச்சுவையுடன் கூறப்பட்டிருக்கும் படமானது நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் உள்ளது.
Read More : 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!