தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் இங்கிலாந்து பல்கலைக்கழகம்...! மத்திய அரசு ஒப்புதல்
தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்கை நிறைவேற்றும் வகையில், இந்தியாவில் வளாகத்தை நிறுவ இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.
தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் திட்டமிடப்பட்டுள்ளபடி சர்வதேச மயமாக்கலின் இலக்குகளை அடைவதை நோக்கி கல்வி அமைச்சகம் முயற்சித்துள்ளது. இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் தங்கள் முதல் வளாகத்தை நிறுவ ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டது. உலகளவில் இப்பல்கலைக்கழகம் முதல் 100 உயர்கல்வி நிறுவனங்களில் தரவரிசையில் உள்ளது. மேலும் இந்தியாவில் நிறுவப்படுவதன் மூலம் இந்தியாவின் கல்வி சூழலை மேம்படுத்தும்.
மாணவர்களுக்கு உலகளாவிய வெளிப்பாட்டிற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் இந்திய வளாகங்களை அமைப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின் கீழ், ஒப்புதல் கடிதம் பெறும் முதலாவது வெளிநாட்டு பல்கலைக்கழகம் இதுவாகும்."தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ், கல்வியின் சர்வதேசமயமாக்கல்: இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் அமைத்தல்" என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு இந்த ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.