இனிமேல் இதை படிக்காதீங்க.." மேற்படிப்பு அங்கீகாரம் ரத்து.! மாணவர்கள் ஏமாற வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை.!
இந்தியாவில் ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு M.Phil பட்டப்படிப்பு அவசியமான தகுதியாக கருதப்பட்டது. இந்நிலையில் 2022-23 கல்வியாண்டில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு M.Phil அவசியமில்லை என யுஜிசி வெளியிட்டு இருந்தது.
மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து இந்த பட்டப் படிப்பை நீக்குவதாகவும் அறிவித்திருந்தது. இதற்கு முன்பு படித்தவர்கள் அது சான்றிதழ்கள் செல்லும் என்று அறிவித்த யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் கடந்த ஆண்டிலிருந்து இந்த பட்டப்படிப்பு நீக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் M.Phil பட்டப் படிப்பிற்கு ஆட்களை சேர்த்து வருவதாக யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து யூஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் M.Phil பட்டப்படிப்பு இந்தியாவில் செயல்படும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே அந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம். அந்தப் படிப்பிற்கான அங்கீகாரம் தடை செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்து இருக்கிறது.