அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி..!! தமிழக பாஜக தலைவராகிறார் வானதி சீனிவாசன்..? வெளியான பரபரப்பு தகவல்..!!
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தொங்கு பாராளுமன்றம் உருவாகியுள்ளது. இதனால், பாஜக மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த சூழ்நிலையில் புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சில டம்மியான இலாக்கக்கள் ஒதுக்கப்பட்டது. பெரும்பான்மை பெற்ற பாஜகவில் முக்கிய தலைவர்களுக்கு முக்கியத் துறைகளும் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது நித்திஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை நம்பியே பாஜக ஆட்சி அமைவதால் அந்த 2 கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. அதேபோல மற்ற கூட்டணி கட்சி சேர்ந்தவர்களுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் இருவரில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. தற்போது தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதத்தை உயர்த்திய அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
இது தொடர்பான தகவல்கள் இன்னும் சில நாட்களில் உறுதியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வகையில் மாநில தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் பாஜக வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன.
Read More : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!! அதிரடியாக உயருகிறது டிவி சேனல்களுக்கான டிஷ் கட்டணம்..!!