முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தூள்...! ஆண்டுக்கு 100,000 மடிக்கணினி தயாரிப்பு... சென்னையில் புதிய அலையை திறந்து வைத்த மத்திய அமைச்சர்...!

Union Minister inaugurates new wave in Chennai to produce 100,000 laptops per year
07:14 AM Jan 11, 2025 IST | Vignesh
Advertisement

இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் சிர்மா எஸ்ஜிஎஸ்-ன் புதிய அதிநவீன மடிக்கணினி தயாரிக்கும் ஆலையை தொடங்கி வைத்தார். சென்னை ஏற்றுமதி மண்டலத்தில் (MEPZ) அமைந்துள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி சூழலை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ஐடி வன்பொருள் உற்பத்திக்கான பி.எல்.ஐ 2.0 திட்டத்தின் கீழ், சிர்மா எஸ்.ஜி.எஸ், நிறுவனம் சென்னையில் தைவான் நாட்டின் மைக்ரோ ஸ்டார் இன்டர்நேஷ்னல் நிறுவனத்திற்காக, புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக இருந்து, மடிக்கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கான முயற்சியை இது குறிக்கிறது. உயர்தர தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த நிறுவனம் வலுப்படுத்தும்.

தைவான் நாட்டின் மைக்ரோ-ஸ்டார் இன்டர்நேஷனலுக்காக (எம்எஸ்ஐ) மடிக்கணினிகளைத் தயாரிக்க தைவானை தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோ-ஸ்டார் இன்டர்நேஷனலுடன் (எம்எஸ்ஐ) சிர்மா எஸ்ஜிஎஸ் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் 100,000 மடிக்கணினிகள் என்னும் ஆரம்ப உற்பத்தி திறனுடன் தொடங்குகிறது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேவையின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யப்படும்.

Tags :
centralcentral govtChennailaptopLaptop industryமத்திய அரசு
Advertisement
Next Article