சமூக ஊடகங்களில் ஆபாச கன்டென்ட்.. சட்டம் கடுமையாக்கப்படும்..!! - அஸ்வினி வைஷ்ணவ்
சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதன்கிழமையன்று ராஜ்யசபாவில் அவை மீண்டும் தொடங்கியதும், மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விதி 267ன் கீழ் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால், இந்தக் கோரிக்கையை ராஜ்யசபா சபாநாயகர் நிராகரித்தார். இதனால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சபையில் அமளியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து பணி ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பேசிய பாஜக எம்.பி. அருண் கோவில், 'சமூக வலைதளங்களில் சட்டத்துக்குப்புறம்பாக, ஆபாசம் நிறைந்த மற்றும் பாலியல் ரீதியிலான, அவை தொடர்புடைய உள்ளீடுகள் ஒளிபரப்பப்படுவதை கண்டறிந்து சோதனை செய்ய தற்போது இருக்கும் நடைமுறைகள் என்ன? இப்போது இருக்கும் சட்டங்கள், சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தும் அளவுக்கு இல்லை.
இந்த நிலையில், அரசு இந்த சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கிறதா?' என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், "இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகம் என்பது அதிக சுதந்திரத்துடன் விளங்கும் தளமாக உள்ளது. ஆனால் அதற்கென கட்டுப்பாடுகள் அதிகம் இல்லை.
மோசமான உள்ளடக்கத்தை கொண்ட விஷயங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்றன. முன்பெல்லாம் தலையங்க சரிபார்ப்புகள் இருந்தன. ஒரு விஷயத்தை வெளியிடும் முன்பு அதில் உள்ள குறைகள் சரி பார்க்கப்படும். ஆனால், அதுபோன்ற சோதனைகள் இப்போதில்லை. சட்ட விரோதமாக சமூக ஊடக தளங்களில் ஒளிபரப்பாகும் ஆபாச மற்றும் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்களைச் சரிபார்க்க தற்போதுள்ள வழிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். கட்டுப்பாடற்று கிடக்கும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டத்தை கடுமையாக்குவது அவசியமாகும். நாடாளுமன்ற நிலைக்குழு இந்தப் பிரச்சினையை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Read more ; ஒன்றாக குளிக்க மறுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்.