ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்..!! - எதிர்கட்சிகள் கடும் கண்டனம்
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அரசியலமைப்பு 129-ஆவது சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
வருகிற 20-ஆம் தேதியுடன் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடையும் சூழலில், நேற்றே 2 மசோதாக்களையும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்வார் என செய்தி வெளியான நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) சட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். ஜன நாயகத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சாமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.