For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி இதுக்கும் கட்டுப்பாடு...! டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023-க்கு மத்திய அரசு ஒப்புதல்...!

09:44 AM Nov 11, 2023 IST | 1newsnationuser2
இனி இதுக்கும் கட்டுப்பாடு     டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023 க்கு மத்திய அரசு ஒப்புதல்
Advertisement

மத்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகத் துறைக்கு டிஜிட்டல் மீடியா பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏதுவாக "டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023"-க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்கு ஏற்ப மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து தகவல்களைப் பரப்புவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவத அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

சமீப காலங்களாக, பார்வையாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தும் விதம் டிஜிட்டல் இடத்தை நோக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் இப்போது இணையம், சமூக மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களுடன் இணைக்கப்பட்டு மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி தொலைதொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1172 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

ஓடிடி மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் ஸ்பேஸில் ஏஜென்சிகள் மற்றும் அமைப்புகளை இணைக்க சிபிசிக்கு இந்த கொள்கை உதவும். சிபிசி இப்போது முதல் முறையாக அதன் பொது சேவை பிரச்சார செய்திகளை மொபைல் பயன்பாடுகள் மூலமும் வழிநடத்த முடியும். சமூக ஊடகத் தளங்கள் பொது உரையாடல்களின் பிரபலமான சேனல்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், இந்தத் தளங்களில் அரசு வாடிக்கையாளர்களுக்கு சிபிசி விளம்பரங்களை வைக்கும் செயல்முறையை இந்தக் கொள்கை மேலும் ஒழுங்குபடுத்துகிறது. பல்வேறு தளங்கள் மூலம் அதன் பரவலை மேம்படுத்த டிஜிட்டல் மீடியா ஏஜென்சிகளை ஒருங்கிணைக்க சிபிசிக்கு இந்தக் கொள்கை அதிகாரம் அளிக்கிறது.

Tags :
Advertisement