பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், டீ கப், தட்டு விலை கடுமையாக உயரும்..!! பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..!!
பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்கவரி 15% ல் இருந்து 25% ஆக அதிகரிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நடப்பு 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பிளாஸ்டிக் மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் விலை, அதன் மூலப்பொருளான அம்மோனியம் நைட்ரேட்டின் சுங்க வரி அதிகரிப்பால், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் பேப்பர் தட்டு, டீ கப் தண்ணீர் பாட்டில் மற்றும் கப், கைப்பை, கொடிகள் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.
Read More : BREAKING | மத்திய பட்ஜெட் எதிரொலி..!! தங்கம் விலை ரூ.2,080 குறைந்தது..!! நகைப்பிரியர்கள் செம குஷி..!!