For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகிழ்ச்சி...! குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!

Union Cabinet approves hike in Minimum Support Price
06:15 AM Jun 20, 2024 IST | Vignesh
மகிழ்ச்சி     குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, 2024-25 சந்தைப் பருவத்திற்கு கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளுக்கு சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டுக்கு அதிக அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி எள்ளின் விலை குவிண்டாலுக்கு ரூ.632-ம், காட்டு எள்ளின் (நைகர் சீட்) விலை குவிண்டாலுக்கு ரூ.983-ம், துவரம்பருப்பு குவிண்டாலுக்கு ரூ.550-ம் அதிகரிக்கும்.

Advertisement

நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ.117-ம், சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.191-ம், கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ.444-ம், மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.135-ம், பயத்தம் பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.124-ம் அதிகரிக்கும். எண்ணெய் வித்துகளை பொறுத்தவரை நிலக்கடலை விலை குவிண்டாலுக்கு ரூ. 406-ம், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ.520-ம், சோயாபீன் (மஞ்சள்) விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ.292-ம் அதிகரிக்கும்.

நடுத்தர இழை மற்றும் நீள இழை பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ. 501 அதிகரிக்கும். அகில இந்திய அளவில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது என மத்திய பட்ஜெட் 2018-19-ல் அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, 2024-25 சந்தைப் பருவத்தில் கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Tags :
Advertisement