For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2024 பட்ஜெட்!… வரிவிதிப்பில் கொண்டுவரப்படும் புதிய மாற்றங்கள்!… மத்திய அரசின் திட்டம் என்ன?

07:41 AM Jan 23, 2024 IST | 1newsnationuser3
2024 பட்ஜெட் … வரிவிதிப்பில் கொண்டுவரப்படும் புதிய மாற்றங்கள் … மத்திய அரசின் திட்டம் என்ன
Advertisement

2024ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டில் வரிவிதிப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றில் பல மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என ICRA கணித்துள்ளது.

Advertisement

2024ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சியடையும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், நெருங்கி வரும் பொதுத் தேர்தலுக்கு மத்தியில் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், வரிவிதிப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றில் பல மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என ICRA கணித்துள்ளது.

2019 ஆம் ஆண்டிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாகத் தொடர்ந்து தாக்கல் செய்யும் பட்ஜெட் அறிக்கையாகும். நிர்மலா சீதாராமன் தவிர, ஐந்து முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய், பி சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் உள்ளனர். ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் வேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவது இடைக்காலப் பட்ஜெட்.

இந்த ஆண்டுப் பொதுத் தேர்தல் திட்டமிடப்பட்டுள்ள காரணத்தால், இது இடைக்காலப் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பொதுவாக இடைக்காலப் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் இருக்காது என்று கூறப்பட்டாலும், பட்ஜெட் அறிக்கையில் சில முக்கியமான மாற்றங்களும், திருத்தங்களும், அறிவிப்புகளும் இருக்குமென ICRA கணித்துள்ளது. 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு தாக்கல் செய்யும்.

ஜிஎஸ்டி வசூல் அதிகரித்ததாலும், இந்திய சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளதாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு SST எனப்படும் பாதுகாப்புப் பரிவர்த்தனை வரியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை சந்தைகளில் இருக்கிறது. இந்த SST வரி குறைப்பது மூலம் அதிகப்படியான முதலீடுகள் உள்நாட்டுச் சந்தையில் வரும்.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக ஒரு முதலீட்டாளர் நிறுவனத்தின் முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்துகிறது மற்றும் அதே நேரத்தில் பங்குதாரர்களின் கைகளில் உள்ள ஈவுத்தொகைக்கு அரசாங்கம் வரி விதிக்கிறது. இதன் விளைவாக ஈவுத்தொகைக்கு இரட்டை வரி விதிக்கப்படுகிறது, இதனால், ஈவுத்தொகை மீதான இரட்டை வரி விதிப்பில் இருந்து ஒரு நிவாரணம் தேவைப்படுவதாகவும், இதை மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ற்போது இருக்கும் மத்திய அரசின் பென்ஷன் திட்டம் பெரும்பாலான மக்களுக்கு உகந்தாக இல்லை, எனவே இதை மேம்படுத்தி வகைப்படுத்தா துறையில் அதிகப்படியான மக்களை ஈர்க்கும் வழியை மத்திய அரசு கட்டாயம் தேடும் என ICRA அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவச் செலவுகள் மற்றும் நிதி செலவுகள் அதிகரித்திருக்கும் வேளையில் NPS திட்டத்தில் இருந்து கிடைக்கும் Annuity தொகைக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் NPS திட்டத்தில் வருடம் 50000 முதலீடு செய்வது மூலம் பெரிய அளவிலான வருமானம் வராது, இது முதலீட்டாளர்களுக்குப் போதுமானதாக இருக்காது என்பதால் முதலீட்டு அளவீட்டை 1 லட்சமாக உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு இந்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் ஆயுள் காப்பீட்டுக்கான முதலீடு மற்றும் வரி சலுகையை 80சி பிரிவில் இருந்து தனியாகப் பிரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் மீது மத்திய அரசு விதிக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மறுஆய்வு செய்து குறைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேபோல் ஈக்வி்ட்டி மியூச்சவல் பண்ட் மற்றும் ULIP திட்ட முதலீடுகள் மீதான வரி விதிப்பையும் மறுஆய்வு செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை, சவ்ரின் கிரீன் பாண்ட், நெட் ஜீரோ இலக்கு, கிரீன் ஹைட்ரஜென், எத்தனால், பியோ எரிபொருள் ஆகியவற்றைத் தொடர்பாக அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement