அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! ஆகஸ்ட் இறுதிக்குள்..!! அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 செட் புதிய சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பெண் கல்வி உயர்கல்விக்காக வழங்கப்படும் புதுமைப்பெண் திட்டம் மூலம் ஆண்டுக்கு மூன்றே கால் லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 3-வது வருடம் படிக்கும் பெண்கள் புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் இந்தாண்டு கூட விண்ணப்பிக்கலாம். வரும் 9ஆம் தேதி கோவையில் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
பள்ளிச் சீருடைகள் தாமதமாக வழங்கப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரியாமல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். சில பள்ளிகளில் அளவு சரியாக இல்லை என புகார்கள் வந்தது. தையல் சொசைட்டியில் உள்ள பெண்கள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று அளவெடுத்து அந்தந்த மாணவிகளுக்கு தனித்தனியாக பள்ளிச் சீருடைகள் தைக்கப்படுகிறது. அதனால் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. 4 செட் பள்ளி சீருடை உண்டு. இம்மாத இறுதிக்குள் வழங்கி விடுவோம். அளவெடுத்து தைப்பதால் 15 நாட்கள் தாமதம் ஆகிவிட்டது” என்றார்.