அட இது தெரியாம போச்சே...! வங்கியில் இருக்கும் உரிமை கோரப்படாத பணம்...! எப்படி எடுப்பது...?
வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை ரூ.42,000 கோடி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிமை கோரப்படாத தொகை என்றால் என்ன..? அதனை பெற வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட சில விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்குகளை இயக்க சில விதிகள் உள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவும் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கிறது.
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கில் இருந்து 10 ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால், அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை கோரப்படாத தொகையாகக் கருதப்பட்டு, டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் பணம் டெபாசிட் செய்யப்படும்.
இந்த விதி அனைத்து வகையான வங்கி கணக்குகளையும் உள்ளடக்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு நடப்புக் கணக்கு, சேமிப்பு கணக்கு, வைப்பு தொகை அல்லது தொடர் வைப்பு கணக்கு ஆகியவற்றில் எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால், அந்தக் கணக்கு உரிமை கோரப்படாததாக அறிவிக்கப்படும்.
கணக்கு செயலிழந்துவிடும்
விதிகளின்படி, ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இரண்டு ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால், வங்கி அவரது கணக்கை செயலற்ற பிரிவில் வைக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அடுத்த 8 வருடங்களுக்கும் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கணக்கு கோரப்படாத தொகை என்ற பிரிவில் சேர்க்கப்படும்.
பணம் எடுப்பதற்கான வழிகள்
உங்களுடைய அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் ஏதேனும் வங்கிக் கணக்கு செயலிழந்திருந்தால், அதில் உள்ள தொகையை எளிதாகக் கோரலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது வங்கியில் கணக்கு இருந்தது, இப்போது அவர் இறந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம், பிறகு நாமினி செயலற்ற கணக்கிலிருந்து பணத்தை எளிதாகக் கோரலாம்.