குப்பைமேட்டில் வளரும் எருக்கன் செடியில் பால்வினை நோய்களுக்கு மருந்து இருக்கா.? நம்பமுடியாத மருத்துவ நன்மைகள்.!
பராமரிக்கப்படாத இடங்கள் வறண்ட நிலங்கள், சாலைகள், ஆறு, குப்பைமேனி என எல்லா இடங்களிலும் வளர்ந்து இருக்கும் எருக்கஞ்செடியில் ஏராளமான மருத்துவ நன்மைகள் கொட்டி கிடப்பதாக சித்தமருத்துவம் தெரிவிக்கிறது. இவற்றின் இலை, பூ, தண்டு என அனைத்தும் மருத்துவ பயன்களை கொண்டிருக்கின்றன. இந்தச் செடியிலும் இவ்வளவு நன்மை இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது இந்த தாவரம்.
இந்தச் செடியின் இலையைச் சாறு எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அவற்றை கடுகு எண்ணெயில் வதக்கி எடுத்து சொறி சிரங்கு புண்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இந்தச் செடியில் இருக்கும் பூக்களை உலர வைத்து அவற்றை பொடியாக்கிய பின்பு இதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர பால்வினை நோய்கள் மற்றும் தொழு நோய்கள் குணமாகும். எருக்கன் செடியின் பூக்களை தேவையான அளவு எடுத்து நன்றாக வதக்கிய பின்னர் வீக்கம் மற்றும் கட்டிகளின் மீது வைத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்களுக்கும் எருக்கன் செடியின் பூக்கள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இவற்றை உலர வைத்து, பொடி செய்து புண்களின் மீது தடவி வர உடனடியாக குணமடையும். இந்தச் செடியின் பூக்களை இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றுடன் சுண்டக்காய்ச்சி குடித்து வர ஆஸ்துமா நோய் குணமாகும். நல்ல பாம்பின் விஷத்திற்கும் இவற்றின் பூக்கள் சிறந்த மருந்தாக இருக்கிறது. இந்தப் பூக்களின் 5 மொட்டுக்களை எடுத்து வெற்றிலையுடன் நன்றாக மென்று சாப்பிட்டால் விஷம் ஏறாது. இதன் பின்னர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.