முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி! -தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு

04:13 PM Apr 12, 2024 IST | Mari Thangam
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது.  7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,  தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சிக்கும்,  காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு சில தினங்களுக்கு முன்பு உறுதியானது. இந்த தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு உதம்பூர்,  ஜம்மு மற்றும் லடாக் ஆகிய தொகுதிகளும்,  தேசிய மாநாட்டு கட்சிக்கு அனந்த்நாக்,  ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேசிய மாநாட்டு கட்சி இன்று அறிவித்தது.

அந்த வகையில், ஸ்ரீநகரில் ஷியா தலைவர் அகா ரூஹுல்லாவும்,  பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும்,  முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லாவும் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்தார்.  மேலும் அனந்த்நாக் தொகுதியில் குஜ்ஜார் தலைவர் மியான் அல்தாப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
baramullahjammu kashmirnational confernceomar abdullah
Advertisement
Next Article