அமித்ஷாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.! அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போராட்ட குழு.! அசாம் வரலாற்றின் முக்கியமான நிகழ்வு.!
அசாம் மாநிலத்தில் நீண்ட நாட்களாக போராடிவரும் போராட்டக் குழுவான அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) அமைப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. அசாம் அரசியலில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் போராட்டக் குழுவான உள்ஃபா அமைப்பின் பேச்சுவார்த்தை பிரிவினைச் சார்ந்த 16 உறுப்பினர்கள் அசாம் மாநில முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. 1979 ஆம் ஆண்டு முதல் அசாமில் நடைபெற்று வரும் ஆயுதப் போராட்டத்தில் 10,000 உயிர்கள் பலியாகி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் அசாமில் நிரந்தர அமைதி ஏற்பட்டு நிலையான அமைதி, மாநிலம் முழுவதும் நிலவுவதற்கு வழிவகுக்கும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். இந்த அமைதிக்கான பேச்சுவார்த்தையை தொடர்ந்து சமாதான உடன்படிக்கையில் 8,700 போராளிகள் இணைந்து இருக்கின்றனர்.
இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நீண்ட நாட்களாக அசாமில் நடைபெற்று வரும் அமைதியின்மைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அசாம் மாநில வரலாற்றில் போராளி குழு மற்றும் அரசு இடையேயான அமைதி ஒப்பந்தம் மிக முக்கியமான ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.