3,000 பேரை கொன்ற உக்ரைன்..!! ஆனாலும் ரஷ்யாவுக்கு ஆதரவாக வீரர்களை அனுப்பிக் கொண்டே இருக்கும் வடகொரியா..!!
உக்ரைன் மீது அதன் அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி மற்றும் ஆயுத உதவி செய்து வருவதால், உக்ரைன் இராணுவப் படையும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதி செய்துள்ளன.
இதன் காரணமாக உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட, இந்தப் போரில் ரஷ்யாவின் அணு ஆயுதப் படை தளபதி கொல்லப்பட்டார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயற்சி செய்தன. ஆனால், அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில், குர்ஸ்க் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். டிசம்பரில் நடந்த போரில் வட கொரிய வீரர்கள் 1,100 பேர் கொல்லப்பட்டதாக தென் கொரியாவும் கூறியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் வட கொரியர்கள் இணைந்ததற்கு உக்ரைன் உறுதியான பதில்களைக் கொண்டுள்ளது என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செம குட் நியூஸ்..!! சம்பளத்தில் வந்த அதிரடி மாற்றம்..!!