For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்றே கடைசி நாள்.. கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி கொடுக்க UGC உத்தரவு...!

UGC orders to refund fees to students who drop out of college
06:08 AM Sep 30, 2024 IST | Vignesh
இன்றே கடைசி நாள்   கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி கொடுக்க ugc உத்தரவு
Advertisement

நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் இன்றைக்குள் திருப்பித் தர பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வு செய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது.

கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சேர்க்கையை ரத்து செய்துவிட்ட மாணவர்களுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பி தரவேண்டும். ஆனால், இதை சில கல்லூரிகள் முறையாக பின்பற்றுவதில்லை என புகார்கள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகளை கல்லூரிகள் அவசியம் பின்பற்ற வேண்டும். சேர்க்கை பணிகளுக்காக அவர்களிடம் ரூ.1,000 மட்டும் வசூலிக்கலாம்.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை திரும்பப்பெறும் விண்ணப்பதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் யுஜிசி கல்வி நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் பொழுது கட்டணம் திரும்பப் பெறாதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததை எடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement