முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு..!! புதிய அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை..!!

New Exam Time Table for Canceled UGC NET Exam and Postponed CSIR UGC NET Exam, NCET Exam has been published.
04:12 PM Jun 29, 2024 IST | Chella
Advertisement

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு, என்சிஇடி தேர்வு ஆகியவற்றிக்கான புதிய தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வான 83 பாடங்களுக்கு நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வு ஜூன் 18ஆம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இதில், சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில், நெட் தேர்வின் வினாத்தாள் டார்க் வெப்பில் கசிந்ததை அடுத்து தேர்வுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. மேலும், மே 5ஆம் தேதி தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.

தொடர்ந்து, நீட் தேர்வு குளறுபடிகள் காரணமாக தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஜூன் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவிருந்த 5 அறிவியல் பாடங்களுக்கான சிஎஸ்ஐஆர்- யுஜிசி- நெட் தேர்வை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடைமுறையில் குளறுபடி இருப்பதாக மாணவர்களிடம் இருந்து வலுத்த புகார் ஆகிய காரணங்களினால், ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒரு நாள் முன்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, NCET 2024 தேர்வு ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் (CSIR-UGC NET) தேர்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மக்களே அலட்சியம் வேண்டாம்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க..!!

Tags :
என்சிஇடிதேசிய தேர்வு முகமைதேர்வுயுஜிசி நெட் தேர்வு
Advertisement
Next Article