காங்கிரஸ் தோல்விக்கு என்னுடைய பேச்சு தான் காரணமா.? உண்மையில் நடந்தது இதுதான்.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!
வடமாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. ராஜஸ்தான் சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உதயநிதி ஸ்டாலின் சமாதானம் குறித்து பேசியது தான் காரணம் எனக் கூறி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பதிலளித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் சனதானம் என்பது வைரஸ் கிருமி போன்றது. அதனை அடிக்க வேண்டும் என்று நான் பேசியதில் எந்த தவறும் இல்லை ஆனால் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் நான் சமாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை சனதானவாதிகளை படுகொலை செய்ய வேண்டும் என்று கூறியதாக பொய் பரப்பியிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் சனாதானத்திற்கு எதிராக பேசியதற்கு தனது தலைக்கு 5 கோடி மற்றும் 10 கோடி ரூபாய் விலை நிர்ணயித்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனது பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள். நான் எனது கொள்கையை தான் பேசியிருக்கிறேன். அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.