முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Udhayanidhi Stalin | ’தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் உரிமைத்தொகை’..!! உதயநிதி ஸ்டாலின் உறுதி..!!

02:41 PM Mar 28, 2024 IST | Chella
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மாமாவுக்காக வாக்கு சேகரிக்க ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளேன். உதயசூரியன் சின்னத்தில் நாம் போடும் ஓட்டு, பிரதமர் மோடியின் தலையில் நாம் குடுக்கும் கொட்டு. குறைந்தது 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு மாமாவை ஜெயிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், நான் மாதம் 2 முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வருகை தந்து உங்களது தேவைகளை நிறைவேற்றுவேன்.

முக.ஸ்டாலின், முதலமைச்சர் ஆனவுடன் அவர் போட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்குதான். 3 ஆண்டுகளில் ரூ.460 கோடி மகளிர் இதனை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. பெண்கள் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று புதுமைப்பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், 2 ஆண்டுகளில் 3 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

1 கோடியே 18 லட்சம் மகளிர் உரிமைத்தொகை பெறுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு விண்ணப்பித்த 1 கோடி 60 லட்சம் பேருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும். தமிழ்நாட்டில் பாஜகவால் ஒரு சீட்டு கூட பெற முடியாது. ஏற்கனவே, 'GO BACK MODI' என்றோம். இந்தமுறை 'GET OUT MODI' என்று சொல்ல வேண்டும். வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி கேட்டோம். இதுவரை வழங்கவில்லை. மரியாதையாகத்தான் கேட்டேன். இதுவரை வழங்கவில்லை” என்று என்றார்.

Read More : ’Village Cooking Channel’ தாத்தாவுக்கு இதய பாதிப்பு..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!

Advertisement
Next Article