யு 19 ஆசிய கோப்பை 2024..!! வரலாறு படைத்த வங்கதேசம்..!! மோசமான தோல்வியடைந்த இந்தியா..!!
இந்தியா யு-19, வங்கதேசம் யு-19 மோதிய ஆசிய கோப்பை 2024 ஃபைனலில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய யு19 அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய வங்கதேசம் யு-19 அணி, 49.1 ஓவர்களில் 198 எடுத்து ஆல் ஆவுட் ஆனது. ஆனால், 199 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வியடைந்தது. இந்திய அணி 35.2 ஓவர்களில் 139 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதற்கிடையே, வங்கதேச அணி இரண்டாவது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
முன்னதாக, பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. 2-வது இன்னிங்சில் 175 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 3.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி இதையடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களை எடுத்தது. இந்தியா 18 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. 19 ரன்கள் எடுத்தால் ஆஸி., இரண்டாவது டெஸ்டில் ஜெயிக்கும் என இருந்தது. எளிய ஸ்கோர் என்பதால் எளிதில் எட்டி விட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பகலிரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் அசுர வேகத்தில் சரிந்தது. முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 2-வது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், கே.எல். ராகுல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில், கோலியும் சோபிக்கத் தவறினர். ரிஷப் பண்ட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன்கள் விளாசினார்.
Read More : Exam: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!