For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகில் எத்தனை வகையான காடுகள் உள்ளன.? அவை எங்கு அமைந்திருக்கிறது.?

06:10 AM Dec 04, 2023 IST | 1newsnationuser4
உலகில் எத்தனை வகையான காடுகள் உள்ளன   அவை எங்கு அமைந்திருக்கிறது
Advertisement

காடுகள் என்பவை இயற்கையின் ஒரு முக்கியமான பகுதியாகும். இவற்றில் மரங்கள், செடிகள், வனவிலங்குகள், நுண்ணுயிர்கள், பறவைகள் மற்றும் ஊர்வன என பல்வேறு வகையான உயிரிகள் வாழ்ந்து வருகின்றன. மனிதர்கள் வாழும் பகுதிகளை போல விலங்குகள், மரங்கள் மற்றும் செடிகள் பறவைகள் என காடுகளின் உலகம் தனியானது. உணவுச் சங்கிலி மற்றும் இயற்கையில் காடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. காடுகளின் வளர்ச்சி மற்றும் அழிவைப் பொறுத்துதான் பூமியின் சுற்றுச்சூழலில் தாக்கம் ஏற்படுகிறது.

Advertisement

காடுகள் அவற்றில் வளரும் மரங்கள் மற்றும் தட்பவெட்ப நிலை என் அடிப்படையில் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஊசி இலை காடுகள், இலையுதிர் காடுகள், கலப்பு காடுகள், மத்திய தரைக் கடல் காடுகள் மற்றும் வெப்ப மண்டல காடுகள் ஆகும். இவற்றில் ஊசியிலை காடுகள் பெரும்பாலும் ஆசியா வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டத்தின் வடக்கு பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இந்த வகை காடுகளில் பைன் ஹேம் லாக் மற்றும் ஸ்ப்ருஸ் போன்ற மரங்களை கொண்டிருக்கிறது. இலையுதிர் காடுகளில் பெரிய இலைகளை கொண்ட மரங்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தின் தொடக்கத்தில் இலைகளை உதிர்கின்றன. அமெரிக்கா மேற்கு ஐரோப்பா வடகிழக்கு ஆசிய பகுதிகளில் இந்த வகை காடுகள் அமைந்திருக்கிறது.

கலப்பு காடுகளில் இலையுதிர் காடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் ஊசி இலை காடுகளில் காணப்படும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தக் காடுகள் பொதுவாக மலைப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இவை உலகின் எல்லா நிலப்பரப்புகளிலும் அமைந்துள்ளது. மத்திய தரைக்கடல் பகுதிகளில் அமைந்துள்ள இந்த காடுகளில் குட்டையாக வளரும் ஓக்ஸ் மற்றும் பைன் மரங்கள் காணப்படுகின்றன. இந்த வகை காடுகளில் பூச்சிகளை உண்ணும் பறவைகள் மற்றும் காட்டுப் பூக்கள் நிறைந்துள்ளது. வெப்ப மண்டல காடுகள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிகளில் இருக்கிறது. இந்த வகை காடுகளில் ஆண்டுதோறும் மழை பெய்து வருவதால் இவை மழை காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றது. அதிகமான விலங்கினங்கள் பூச்சிகள் மற்றும் பறவைகள் பாலூட்டிகள் என பல்வேறு விதமான உயிர்கள் இங்கு வளர்கிறது.

Tags :
Advertisement