இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..!! யார் அவர்கள்? கண்டுபிடிப்புகள் என்ன?
இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவா் ஸ்வீடனைச் சோ்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவா், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தாா். தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவா் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினாா். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ஆம் தேதி பரிசு வழங்கப்படும்.
அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மைக்ரோஆர்என்ஏ-வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அடுத்ததாக, இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும் (அக்.8), தொடா்ந்து வேதியியல், இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாள்களிலும் அறிவிக்கப்படவுள்ளன.
2024 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெறும் இருவர் ; விக்டர் அம்ப்ரோஸ் உலகளவில் புகழ் பெற்ற பயோலஜிஸ்டாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு நபரான கேரி ருவ்குன், அமெரிக்காவில் மைக்ரோ பயோலஜிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் அவர், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், ஜெனிட்டிக் ரீதியிலான முக்கியமான துறைகளுக்கு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகப்பெரிய நோயான, கேன்சர் போன்ற நோய் ஏன் ஏற்படுகிறது? அதனை சீர்செய்வதற்கான வழிமுறைகள் என்ன? போன்றவற்றை உயிரியல் ரீதியாக அவர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டு கூறியதற்காக, அவர்கள் இருவருக்கும் இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; ”இனியாவது கவனமா செயல்படுங்க”..!! மெரினா சம்பவம் தொடர்பாக விஜய் பரபரப்பு பதிவு..!!