BREAKING: நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த சதியா.? அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் பரபரப்பு.!
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதலின் 22 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அப்சல் குரூப் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன் 22 ஆவது வருட நினைவு தினம் இன்று பாராளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். மேலும் அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தில் பாதுகாப்பு வளையங்களையும் மீறி இரண்டு நபர்கள் நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.