For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சோகம்...! வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து இரண்டு பேர் உயிரிழப்பு...!

12:37 PM Apr 19, 2024 IST | Vignesh
சோகம்     வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து இரண்டு பேர் உயிரிழப்பு
Advertisement

வாக்கு செலுத்த வந்த இடத்தில் வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்தன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காலமாக தாமதமானது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அனைத்து வாக்காளர்களும் சிரமமின்றி வாக்களிக்க குடிநீர், கூடாரம், கழிப்பறை, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் வாக்காளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பள்ளி பகுதி வாக்குச்சாவடியில் மூதாட்டி சின்ன பொண்ணு (77) வெயில் தாங்காமல் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். அதேபோல, சேலம் பழைய சூரமங்கலம் வாக்குச் சாவடியில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement