"இது ஒரு தொடர்கதை" காங்கிரஸ் கட்சியிலிருந்து BJP-யில் இணைந்த 2 எம்எல்ஏக்கள்.!
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் பாஜகவில்(BJP) இணைந்து சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
2024 ஆம் வருட பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மூத்த தலைவர்கள் என பலரும் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அம்மா நில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு இந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றால் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவருக்கு திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய தமிழக காங்கிரஸ் அதனை மேல் எடுத்திருக்கும் அனுப்பி இருக்கிறது
இத்தகைய அரசியல் சூழலில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருப்பதை அம்மா நில முதல்வர் தனது சமூக வலைதள பதிவின் மூலம் உறுதி செய்திருக்கிறார்.
அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கலான நினாங் எரிங் மற்றும் வாங்கலிங் டோவாங்டங் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கின்றனர். மேலும் பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் தலைமை மற்றும் பாஜகவின் கொள்கைகள் பிடித்திருந்தால் அந்த கட்சியில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்