Holiday: அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை...! அசாம் முதல்வர் உத்தரவு...!
அஸ்ஸாம் முதல்வர் தனது அரசு பணியாளர்கள் தங்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதற்காக நவம்பர் மாதம் இரண்டு நாள் சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு சுதந்திர தின உரையின் போது அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் மாமியார்களுடன் நேரத்தை செலவிட இரண்டு சிறப்பு சாதாரண விடுப்புகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். இதையடுத்து ஆண்டுதோறும் இந்த சிறப்பு விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில முதல்வர் தனது எக்ஸ் தளத்தில்; தங்கள் பெற்றோர் மற்றும் தனது வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். அதேநேரம், இந்த விடுப்பை வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும் இந்த விடுமுறையை தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இதற்கு நடுவே, 7-ம் தேதி சத் பூஜை, 9-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக 5 நாட்கள் பெற்றோருடன் செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.