முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை.. 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு..!! - தவெக

TVK will not contest in Erode by-elections.. 2026 assembly election is their target..!!
01:33 PM Dec 19, 2024 IST | Mari Thangam
Advertisement

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிமீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60-வார்டுகளில் 37-வார்டுகள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உள்ளாக வருகிறது. பரப்பளவில் சிறியதாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 53- வாக்குச்சாவடி மையங்களில் உள்ளன. அதில், உள்ள 237 வாக்குச்சாவடியில் 110,305- ஆண் வாக்காளர்களும், 117,142 பெண் வாக்காளர்களும் 33- மாற்றுப் பாலினத்தவர்களும் என மொத்தம் 227,480 வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisement

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவையடுத்து தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் அதிகாரிக்கு தெரியப்படுத்தியது. இந்த இடைத்தேர்தலில் தவெக தலைவர் விஜய் களம் காண்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் தங்களின் இலக்கு என்றும், இடைத்தேர்தல் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கட்சிக்குள் எந்த சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என நிர்வாகிகளை விஜய் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read more ; அது எப்படி வாத்தியாரே.. புகழ் நடிகர் கோதண்டராமன் காலமானார்..! தமிழ் சினிமாவில் சோகம்

Tags :
2026 assembly electionErode by-electionstvk
Advertisement
Next Article