For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TVK VIJAY | மீண்டும் மாணவர்களை சந்திக்கும் விஜய்..! இந்த முறை என்ன சர்ஃப்ரைஸ் கொடுக்கப் போறாருண்ணே தெரியல..!

TVK VIJAY | Vijay will meet the students again..! I don't know what kind of surprise they are going to give this time..!
01:37 PM May 10, 2024 IST | Kathir
tvk vijay   மீண்டும் மாணவர்களை சந்திக்கும் விஜய்    இந்த முறை என்ன சர்ஃப்ரைஸ் கொடுக்கப் போறாருண்ணே தெரியல
Advertisement

TVK VIJAY : இந்த ஆண்டு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகின, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் விரைவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைச் சந்திக்க உள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.

Advertisement

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பதிவில், “அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சென்னை - நீலாங்கரை பகுதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கும் விழாவை விஜய் நடத்தி இருந்தார், இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினாலும்,இந்த கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடாது, சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மாணவர்களை சந்திக்க இருப்பதாக விஜய் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து பெரிய அரசியல் கூட்டத்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்து பெருமைபடுத்திய நடிகர் விஜய், தற்போது அரசியல் தலைவராக மாறியுள்ளதால் இந்த முறை 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த திருப்பூர் மாணவி மகாலெட்சுமிக்கு என்ன சர்ஃப்ரைஸ் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

READ MORE: ரீல்ஸ் மோகத்தால் பலியான இளைஞர்..!! பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!

Breaking: உதயநிதி சனாதன சர்ச்சை.. நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்…!

‘விளம்பரத்தில் நடிக்க 2 கோடி..’  No சொன்ன சாய்பல்லவி! – குவியும் பாராட்டு..

Tags :
Advertisement