முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TVK Vijay | த்ரிஷா குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்..!! இதை கவனிச்சீங்களா..?

Actor Vijay is said to have put an end to the controversies about Trisha at the ceremony of awarding certificates to students today.
01:46 PM Jun 28, 2024 IST | Chella
Advertisement

இன்றைய தினம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் த்ரிஷா குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

தற்போது பரவும் கிசுகிசு என்னவென்றால் நடிகர் விஜயுடன் நடிகை த்ரிஷா காதலில் இருக்கிறார் என்பதே. இதை யாரும் உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இதெல்லாம் கில்லி, குருவி படத்தில் இருந்தே பேசப்படும் விஷயம்தான். அதெல்லாம் சரி இப்போது ஏன் இதை பற்றி பேசுகிறீர்கள் என்றால் அதற்கு சில காரணங்கள் உள்ளன. நெட்டிசன்கள் கண்டுபிடித்த காரணங்கள் அவை. த்ரிஷா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். அதற்கு இன்ஸ்டாவில் அவர் ஒரு ஆங்கில காதல் பாடல் போட.. அதில் நீதான் என் காதல்.. என் உயிர் பிரியும் வரை நீதான் என் காதல் என்றெல்லாம் ஆங்கிலத்தில் வரிகள் வருகின்றன.

இதையடுத்து, த்ரிஷாவின் பழைய படங்களை நெட்டிசன்கள் தோண்ட.. அதில் பல போட்டோக்களில் விஜயின் ஷூ தெரிகிறது. அதாவது அதே காலகட்டத்தில் விஜய் பயணம் செய்த போது அணிந்த அதே கருப்பு வெள்ளை ஷூவை.. அதே மாடலை திரிஷா போட்டோவில் இருக்கும் கால் ஒன்றும் போட்டுள்ளது. இதெல்லாம் போக திரிஷா இருந்த பயண லொகேஷன்களில் விஜயும் இருந்தது சந்தேகத்தை கிளப்பியிருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சமூக வலைத்தளங்கள் பற்றி பேசினார். இதில் திரிஷா பற்றிய விவகாரம் குறித்தும் சூசமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

திருவான்மியூரில் மாணவர்களை சந்தித்த விஜய் பேசுகையில், “போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. சோஷியல் மீடியாவில் சிலர் புறணி பேசுகிறார்கள். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள்; வரும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று விஜய் கூறியது தன்னை பற்றி பரவிய வதந்திதான் காரணம் என்கிறார்கள்.

Read More : TVK Vijay | டாப் 10 மாணவிகளுக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கிய விஜய்..!! என்ன தெரியுமா..?

Tags :
Trishavijay
Advertisement
Next Article