முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TVK Vijay | இஸ்லாமிய உறவுகளுக்கு ரம்ஜான் வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய்..!!

10:33 AM Apr 11, 2024 IST | Chella
Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் கடைபிடித்து வந்தனர். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ரமலான் மாதத்தின் முதல் பிறையின் அடிப்படையில் நோன்பு அறிவிப்பு வெளியிடப்படும். அதேபோல் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில், "புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : ’இனி விடிய விடிய ஏசி ஓடினாலும் இதை மட்டும் பண்ணிடுங்க’..!! ’கரண்ட் பில் அதிகம் வராது’..!! மின்சார வாரியம் டிப்ஸ்..!!

Advertisement
Next Article