For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நெருங்கும் மாநாடு.. அன்புமணிக்கு போன் போட்ட தவெக தலைவர் விஜய்..!! 5 நிமிட உரையாடல்.. என்ன விஷயமா இருக்கும்?

TVK Vijay suddenly called Anbumani Ramadoss today and wished him on his birthday.
07:03 PM Oct 09, 2024 IST | Mari Thangam
நெருங்கும் மாநாடு   அன்புமணிக்கு போன் போட்ட தவெக தலைவர் விஜய்     5 நிமிட உரையாடல்   என்ன விஷயமா இருக்கும்
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை விஜய் தொடங்கியதில் இருந்தே, விஜயின் ஒவ்வொரு நகர்வும் தமிழக அரசியலில் கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் உடனான இந்த உரையாடல் அரசியல் களத்தில் பேசு பொருளாக உள்ளது.

Advertisement

இந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிராவாண்டி வி.சாலையில் விஜயின் முதல் அரசியல் மாநாடு என்பது நடைபெற உள்ளது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கிய நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். இந்த அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சி கொள்கை மற்றும் விவாதமான கட்சி கொடிக்கான அர்த்தத்தை நடிகர் விஜய் விளக்கி கூற உள்ளார்.

இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் இன்று திடீரென்று பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாசுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துள்ளனர். இந்த தொலைபேசி உரையாடல் என்பது சுமார் 5 நிமிடங்கள் வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் அன்புமணி ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டும் நடிகர் விஜய், அன்புமணி ராமதாஸை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; ஹெலீன் புயலை தொடர்ந்து அமெரிக்காவை மிரட்டும் மில்டன் புயல்.. மணிக்கு 260 கிமீ வேகம்..!! ஹை அலர்ட்டில் புளோரிடா.. 

Tags :
Advertisement