For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TVK Vijay | ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு அச்சமாக உள்ளது”..!! த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு..!!

T. V. K. said that there is a fear of increase in drugs in Tamil Nadu. Chairman Vijay said.
11:04 AM Jun 28, 2024 IST | Chella
tvk vijay   ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு அச்சமாக உள்ளது”     த வெ க  தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
Advertisement

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு அச்சமாக உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் “தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா”வில் அக்கட்சியின் தலைவர் விஜய் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார். கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். தொடர்ந்து சினிமா, அரசியல் என பயணப்பட்டு வரும் அவர் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் ஆண்டாக மாணவ, மாணவியர்களை கௌரவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது. தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடாதீர்கள். ஈடுபடக் கூடாது. உங்களுடைய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள் என்று தெரிவித்த விஜய், கல்வி விருது வழங்கும் மேடையில் போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்ல வைத்து விஜய் உறுதிமொழி எடுக்க வைத்தார்.

Read More : TVK Vijay | ”நல்ல படிப்புகள் தாண்டி நல்ல தலைவர்கள் தேவை”..!! த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு..!!

Tags :
Advertisement