For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TVK Vijay | அடங்கேப்பா..!! இதுவரை விஜய் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா..?

07:17 AM Mar 11, 2024 IST | 1newsnationuser6
tvk vijay   அடங்கேப்பா     இதுவரை விஜய் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா
Advertisement

நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இக்கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மதுரை அழகர்கோவில்ரோடு சூர்யாநகர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை பனையூர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மார்ச் 8ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. இதற்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டது. இதன் மூலமே உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் இணைந்தார்.

Advertisement

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கை அதிதீவிரமடைந்தது. 'அனைவரும் கட்சியில் உறுப்பினராக சேரலாம். வாட்ஸ் அப், டெலிகிராம், அலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் இணையலாம். தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்' என தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, ஒரே நாளில் 20 லட்சம் பேர் பதிவு செய்து கட்சியில் சேர்ந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நேற்று வரை மொத்தம் 50 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 390+ பேருக்கு அரசுப்பணி!… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Advertisement