For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்...!

TVK President Vijay also expressed his condolences on the passing of Manmohan Singh.
06:07 AM Dec 27, 2024 IST | Vignesh
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்
Advertisement

மன்மோகன்சிங் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறைபிரதமராக பதவி வகித்தார்.

Advertisement

மன்மோகன் சிங்குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நினைவிழந்து மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மன்மோகன் சிங். பஞ்சாப், டெல்லி பல்கலைக்கழகங்களில் பணியாற்றி உள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

இது அவர் தனது இரங்கல் செய்தியில்; முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். அவர் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார், அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான பிற உன்னத சேவைகளுக்கு அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement