For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எந்த பொய்யையும் சொல்லி இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.. திமுக அரசை சாடிய தவெக தலைவர் விஜய்..

01:19 PM Jan 11, 2025 IST | Rupa
எந்த பொய்யையும் சொல்லி இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது   திமுக அரசை சாடிய தவெக தலைவர் விஜய்
Advertisement

எந்த பொய்யையும் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம் இனி ஈடேற போவதில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து தவெக தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்டொடர் இன்று நிறைவடைந்துள்ள நிலையில், அதில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் பற்றியோ அல்லது வரவிருக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல் பற்றியோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் பழைய விஷயம் குறித்து விஜய் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

Read More : அடி தூள்..!! தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம்..!! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

Tags :
Advertisement