கொந்தளிக்கும் கடல்..!! பாதுகாப்பான இடத்துக்கு போங்க..!! இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை..!!
தென்மேற்கு பருவமழை காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஈடுபடுவோர் இருப்பின், அவர்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன், தற்போது பெய்து வரும் பருவமழையினால், பாதிப்பு ஏற்பட்டால், அவசர அழைப்பு எண்ணான 117-க்கு தொடர்பு கொள்ளலாம்.
காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படும். இதனால் குறித்த கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75மிமீ வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : உஷார்..!! பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பல கோடி மோசடி..!! தமிழக அதிகாரிகள் மீது பாய்ந்தது வழக்கு..!!