மூளையில் கட்டி..!! இந்த அறிகுறிகள் இருக்கா..? அசால்ட்டா இருக்காதீங்க..!! உடனே மருத்துவரிடம் போங்க..!!
நம் உடலிலேயே மிகவும் முக்கியமான பாகம் மூளை. தலைக்குள் பத்திரமாக இருந்தாலும் இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் உடலில் அது பெரிய பாதிப்பாக மாறும். மூளையில் 60 சதவிகிதம் கொழுப்பு, 40 சதவிகிதம் தண்ணீர், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் உப்பு சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் நரம்புகள் உடலின் செயல்பாடுகளுக்கு மூளை காரணமாக இருக்கும்.
மூளையில் கட்டி:
மூளைக்கட்டியை மூளை கேன்சர் என்றும் கூறுவர். இது, உடலில் ஒரு பாகத்தில் ஆரம்பித்து மெதுவாக மூளையை சென்றடையும். இது வயதானவர்களுக்கு மட்டுமின்றி, இளம் வயதினருக்கும் வரக்கூடும். குழந்தை பருவம் மற்றும் டீன் ஏஜ் பருவங்களை தாண்டியவர்களுக்கு ப்ரைன் டியூமர் வரக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மூளையில் கட்டி இருப்பதற்கு சில அறிகுறிகள் தெரியும். அவை என்னென்ன தெரியுமா?
தலைவலி:
மூளையில் கட்டி இருக்கும் நபருக்கு, தலைவலி வருவது முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். அதுவும் இந்த தலைவலி மிகவும் அழுத்தமாக வரும். ஒரே மாதிரியான தலைவலியால் அவர்கள் அவதிப்படுவர். குறிப்பாக, அதிகாலை சமயங்களில் அல்லது அயர்ந்து தூங்கி ஓய்வெடுக்கும் சமயங்களிலும் தலைவலி வரலாம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக இதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குமட்டல் வாந்தி:
காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வாந்தி-குமட்டல் போன்ற உணர்வு இருந்து, அதனுடன் சேர்ந்து தலைவலியும் வந்தால், அது மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறியாகும். மூளையில் இருக்கும் திசுக்களில் ரத்தம் உரைந்தாலோ அல்லது ரத்த ஓட்டம் நடைபெறாமல் இருந்தாலோ இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
காது கேளாமை:
மூளைக் கட்டிகள் பெரும்பாலும் காது கேளாமையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மூளை நரம்புகளில் அழுத்தம் மற்றும் காதுகளில் கடுமையான வலியை ஒரே நேரத்தில் உணரும் நபர்களுக்கு மூளைக் கட்டி இருக்கலாம். இது அவர்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இருக்கும்.
வலிப்பு:
வலிப்பு நோய் என்பது மூளைக் கட்டிகளின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இது பொதுவாக அனைத்து மூளையில் கட்டி இருக்கும் நோயாளிகளிடம் குறைந்தது 40 சதவீதத்தில் காணப்படுகிறது. எனவே, இந்த அறிகுறி இருந்தால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
பார்வை மங்குவது:
மூளையில் கட்டி இருப்பவர்களுக்கு பார்வை மங்குவது அல்லது பார்வையே தெரியாமல் போவது போன்ற பிரச்சனைகள் இருக்கும் என மருத்துவ ஆராய்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது காரணமாக, வைட்டமின் குறைபாடு காரணமாகவும் கூட பார்வை மங்கலாம். இருப்பினும், மூளையில் கட்டி இருப்பவர்களுக்கு எதிலாவது நேராக பார்ப்பதற்கோ, உண்ணிப்பாக பார்ப்பதற்கோ கடினமாக இருக்கும். அந்த கட்டியின் காரணமாக இது போன்ற பிரச்சனை ஏற்படலாம்.
Read More : திடீரென குறைந்த தக்காளி வரத்து..!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இல்லத்தரசிகள் அவதி..!!