தொடரும் அதிர்வுகள்.. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..
ஜப்பானில் அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இசு, ஒகசவாரா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகு, இசு தீவுகளில் ஒன்றான ஹச்சிஜோ தீவில் 50 செமீ (1.6 அடி) சுனாமி நுழைந்தது. கொசுஷிமா, மியாகேஜிமா மற்றும் இசு ஓஷிமா ஆகிய மூன்று தீவுகளிலும் சிறிய சுனாமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் தீவில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். குழுவில் உள்ள தீவுகளில் சுமார் 21,500 பேரும், ஒகசவரா தீவுகளில் சுமார் 2,500 பேரும் வாழ்கின்றனர் என்று TheAssociated Pressreported செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை அந்நாடு எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறியவை. மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு பொதுவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து, தாஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 6.24 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.
Read more ; சற்றுமுன்.. திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி கைது? – என்ன விவகாரம்?