லஞ்ச் பாக்ஸில் துர்நாற்றம் வீசினால் குழந்தைங்க சரியா சாப்பிட மாட்டாங்க!! துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் செய்யுங்க..
உள்ள அவசரமான கால சூழ்நிலையில், காலை மதியம் இரவு என எல்லா நேர உணவுகளையும் அநேகர் டிபன் பாக்ஸில் வைத்து தான் எடுத்து செல்கின்றனர். இவ்வாறு உணவு எடுத்து செல்லும் லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து சில நேரங்களில் துர்நாற்றம் வீசுவதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். உச்சக்கட்ட பசியில், நாம் டிபன் பாக்ஸை திறக்கும் போது துர்நாற்றம் வீசினால் அந்த சாப்பாட்டை நாம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே போய்விடும். இதனால் தான் சிறுவர்கள் பலர் சாப்பிடாமல் வந்து விடுகிறார்கள். இப்படி லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க சில வழிகள் உள்ளது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
வீட்டிற்கு சென்றதும் லஞ்ச் பாக்சை கழுவிய பின், அதை உடனடியாக மூடி வைக்க கூடாது. அதற்க்கு பதில், லஞ்ச் பாக்சை கழுவிய உடன் பாத்திரத்தை சிறிது நேரம் திறத்து வைக்க வேண்டும். இதனால் பாக்ஸில் இருந்து துர்நாற்றம் வராது. இதற்க்கு பதில், நீங்கள் உருளைகிழங்கையும் பயன்படுத்தியும் துர்நாற்றத்தை போக்கலாம். இதற்க்கு முதலில் நீங்கள் உருளைக்கிழங்கின் மீது சிறிது உப்பைத் தடவி, அதை லஞ்ச் பாக்ஸின் உள்ளே தேய்த்து சுமார் 15-20 நிமிடங்கள் ஊற விட வேண்டும். பிறகு பாக்ஸை கழுவினால் துர்நாற்றம் வராது.
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட இலவங்கப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். கொதித்த தண்ணீரை லஞ்ச் பாக்ஸ் மற்றும் பாட்டிலில் ஊற்றி, பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே விட வேண்டும். பின்னர், அவற்றை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் துர்நாற்றம் நீங்கிவிடும். இதில், இலவங்கப்பட்டைக்கு பதில் எலுமிச்சையின் தோல்களையும் பயன்படுத்தலாம்..