முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய துடைப்பத்தில் இருந்து அதிக தூசி வருதா?? இப்படி செய்து பாருங்கள், தூசியே வராது..

try-this-tips-to-remove-dust-from-broom
05:39 AM Nov 27, 2024 IST | Saranya
Advertisement

பொதுவாக நமது வீட்டை சுத்தம் செய்ய நாம் துடைப்பம் பயன்படுத்துகிறோம். ஆனால், புதிய துடைப்பம் வாங்கி வீட்டை சுத்தம் செய்தால், வீடு இருந்ததை விட அதிகம் குப்பையாகி விடும். ஆம், புது துடைப்பத்தில் இருந்து வரும் தூசியை சுத்தம் செய்வதே பெரிய பிரச்சனையாக இருக்கும். இதுக்கு ஒரு தீர்வே இல்லையா என்று நாம் பல நேரங்களில் சிந்தித்தது உண்டு. இப்படி நீங்களும் யோசித்தது உண்டா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். இவற்றை சுலபமாக சமாளிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

Advertisement

இதற்கு முதலில் புதிதாக வாங்கிய துடைப்பத்தில், கயிற்றை கட்டிவிடுங்கள். பின் வீட்டின் தரை அல்லது சுவர் மீது மெதுவாக தட்ட வேண்டும். நீங்கள் இப்படி செய்வதால், துடைப்பதில் இருக்கும் தூசிகள் கீழே விழுந்து விடும். இப்போது நீங்கள் இந்த துடைப்பம் வைத்து சுத்தம் செய்தால், எந்த தூசியும் இருக்காது. இது மட்டும் இல்லாமல், துடைப்பத்தை சுத்தம் செய்ய நீங்கள் சீப்பு பயன்படுத்தலாம். ஆம், இதற்கு முதலில் நீங்கள் துடைப்பத்தை தலைகீழாக பிடித்துக்கொள்ளுங்கள். பின்னர், சீப்பை வைத்து கீழாக சீவ வேண்டும். இப்படி செய்தால், துடைப்பத்தில் இருக்கும் தூசிகள் கீழே விழுந்து விடும்.

மேலும், புதிய துடைப்பத்தை தண்ணீரில் ஊற வைத்து நன்கு அலசி, பின் வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி 3 முறை செய்தால், எந்த தூசியும் இருக்காது. இதற்க்கு பதில், புதிய துடைப்பத்தில் 5-6 சொட்டு தேங்காய் எண்ணெய் தெளித்து, இரண்டு முதல் மூன்று முறை தரையில் தட்டினால் எல்லா தூசியும் கீழே விழுந்து விடும்.

Read more: முட்டை நல்லது தான்.. ஆனா இப்படி சமைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் ஏற்படும்…

Tags :
broomcoconut oildustoil
Advertisement
Next Article