கிச்சன் சுவரில் உள்ள எண்ணெய் பிசுக்கை சுலபமாக நீக்க வேண்டுமா??? இதை செய்தால் போதும்...
பொதுவாக நாம் வீட்டில் உள்ள தரையை அடிக்கடி சுத்தம் செய்வது உண்டு. இதனால் தரை பளபளப்பாக இருக்கும். ஆனால் நாம் சுவர்களை சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். ஆம், குறிப்பாக கிச்சனில் இருக்கும் சுவரில் எப்போதும் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் நிறைந்து இருக்கும். ஆனால் அதை சுத்தம் செய்வது மிகவும் கடினமான ஒன்று. என்னதான் செய்தாலும் எண்ணெய் பிசுக்கு போகாது. இதற்காக நாம் விலை உயர்ந்த லிக்விட் வாங்கி பயன்படுத்துவோம். என்ன தான் செய்தாலும் எண்ணெய் பிசுக்கை போக்குவது சுலபமான காரியம் இல்லை. அப்படி நீங்களும் அப்படி கிச்சன் சுவரை சுத்தம் செய்வது என்று கவலைப்படுகிறீர்களா?? இனி கவலை வேண்டாம்.. அதிக செலவும் இல்லாமல், கஷ்டமும் இல்லாமல் எளிதான முறையில் சுவரில் உள்ள கடினமான கறைகளை நீக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்க்கு முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரை எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து, அந்த பேஸ்ட்டை எண்ணெய் பிசுக்கு மற்றும் கறையுள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். பின்னர் பழைய டூத் ப்ரெஷ் கொண்டு அந்த பகுதியை மெதுவாக தேய்க்க வேண்டும். தொடர்ந்து, ஒரு துணியை வெந்நீரில் நனைத்து அந்த பகுதியை துடைத்தால் எளிதான முறையில் கை வலியில்லாமல் எண்ணெய் கறையை நீக்கலாம்.
அல்லது, அரை ஸ்பூன் ஷாம்பூ மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து கலக்குங்கள். இப்போது இந்த கலவையில் ஒரு துணியை நனைத்து கறையுள்ள பகுதியில் தேய்த்து குறைந்தது 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் ஈரமான துணி கொண்டு அந்த பகுதியை துடைத்தால் விடாப்பிடியான எண்ணெய் கறைகளும் எளிதாக நீங்கும்.
Read more: “என்னோட பொண்ணு பண்ண இந்த காரியத்த என்னால ஜீரணிக்க முடியல”; பாக்கியாஜ் பகிர்ந்த தகவல்..