முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பளிச்சிடும் சரும பொலிவிற்கு சிம்பிள் ஹோம் ஃபேஷியல் பேக்… மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.!

05:55 AM Nov 26, 2023 IST | 1newsnationuser4
Advertisement

நம் முகத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை மற்றும் எண்ணமாக இருக்கும். எந்த வயதை உடையவர்களாக இருந்தாலும் தங்கள் அழகை பராமரிப்பதில் அனைவரும் கவனம் செலுத்தவே நினைப்போம். இதற்காக பியூட்டி பார்லர் மற்றும் உயர்ரக அழகு சாதன பொருட்களுக்கு பணத்தை செலவு செய்யாமல் வீட்டில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களைக் கொண்டு முகத்தை பளபளப்பாக மாற்றும் ஒரு பேசியல் பேக் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இந்த எளிமையான பேஷியல் பேக் செய்வதற்கு எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் காபி பவுடர் 1 டீஸ்பூன் மற்றும் மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் 1 டீஸ்பூன் காபி பவுடர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதன் பிறகு 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக பேஸ்ட் பதத்தில் வரும்வரை கலக்க வேண்டும். இந்தக் கலவை நன்றாக பேஸ்ட் பதத்தில் வந்ததும் நமது பேசியல் பேக் தயாராகிவிட்டது.

இப்போது முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவி இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். நன்றாக அப்ளை செய்து விட்டு மெதுவாக முகத்தில் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாக ஊறவிட்டு பின்னர் முகத்தை கழுவ வேண்டும். முகத்தை கழுவிய பின் காட்டன் துணியால் நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகம் நல்ல பளபளப்பாகும். மேலும் சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் உயிர் பெற்று சருமத்திற்கு நல்ல பொறிவை கொடுக்கும். எலுமிச்சியில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்க உதவுகிறது. மஞ்சளில் இருக்கும் கிருமி நாசினி பண்புகள் கிருமித்தொற்று தொற்றுக்களில் இருந்து முகத்தை பாதுகாப்பதோடு பருக்கள் வராமலும் தடுக்கிறது.

Tags :
BeautyFacialHealthyskinHome facialSkincare
Advertisement
Next Article