மார்கழியில் இந்த பரிகாரம் செய்து பாருங்க..!! விரைவில் நீங்கள் சொந்த வீடு வாங்கலாம்..!!
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதற்கான முயற்சிகளையும் முடிந்த அளவு மேற்கொண்டு தான் வருகிறோம். ஆனால், அந்த முயற்சியில் சிலர் வெற்றி அடைகிறார்கள். சிலர் தோல்வி அடைகிறார்கள். முயற்சியில் பல தடைகளும் தடங்கல்களும் வருகிறது. கொஞ்சம் பணம் சேர்ந்தால் அந்த பணத்தை செலவு செய்ய துரதிஷ்டம் ஓடி வந்து விடுகிறது. வீண் விரயங்களுக்கு பணம் கரைகிறது.
இப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் வீடு கட்ட முடியவில்லையே என்பவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை மார்கழி மாத பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்து பாருங்கள். உங்களுடைய துரதிஷ்டமானது அதிர்ஷ்டமாக மாறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. மார்கழியில் ஏதாவது ஒரு நாள் தேர்வு செய்துக் கொள்ளுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து விட வேண்டும். வாசல் தெளித்து கோலம் போட வேண்டும்.
நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்துவிட்டு முருகனை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று 27 முறை எழுதுங்கள். இந்த பேப்பருக்கு நடுவே 3 சுர்மா கற்களை வைத்து மடித்து விட வேண்டும். (நாட்டு மருந்து கடைகளில் இருந்து சுர்மா கல் வாங்கி முன்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்)
பின்னர், அந்த பேப்பரை உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு மனம் உருகி இறைவனிடம் சொந்த வீடு கேளுங்கள். பிறகு அந்த பேப்பரை அப்படியே பூஜை அறையில் முருகரின் திருவுருவப்படத்திற்கு பின்னல் வைத்தாலும் சரி, அல்லது குலதெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு பின்னால் வைத்தாலும் சரி, நீங்கள் இந்த பேப்பரில் எழுதிய அந்த விஷயம் விரைவில் நிறைவேறும்.