தலையில் பேனும், ஈறும் அதிகமா இருக்கா? அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியத்தை உடனே செய்யுங்க..
பலருக்கு தலையில் ஈறும், பேனும் அதிகம் இருக்கும். உச்சந்தலை எண்ணெய் தன்மை, அழுக்கு, மாசு போன்றவை ஈறு, பேன் பொடுகு ஆகியவையை உண்டாக்கும். இதனால் அடிக்கடி தலையை சொரிய நேரிடும். அவர்களின் கவனம் முழுவதும் தலையில் தான் இருக்கும். இந்த பிரச்சனை குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தான் அதிகம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் அவர்களால் சரியாக எதையும் கவனிக்க முடியாது, எப்போது தலையிலேயே கையை வைத்திருப்பார்கள். இதற்கு தீர்வாக பலர் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் மற்றும் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அதில் இருந்து வரும் அதிக வாசனை ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.
இதனால், நீங்கள் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள் வைத்து பேனை அடியோடு விரட்டுவது நல்லது. எந்த பொருள்களை வைத்து பேனை விரட்டலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. வெற்றிலை, வேப்பிலை இரண்டையும் நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸியில், மிளகை அரைத்து பிறகு வெற்றிலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து விடுங்கள். இறுதியாக அதில் சிறிது இஞ்சி சாறு சேருங்கள். இந்த கலவையில், வைட்டமின் ஏ சி. பி2, பி1, பொட்டாசியம், நிகோடினிக் அமிலம் மற்றும் தாதுக்களை உள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா பண்புகள் இந்த கலவையில் இருப்பதால், முடி அரிப்பு, பொடுகு போன்றவற்றுக்கு உதவுகிறது.
வேப்பிலையை பயன்படுத்த முடியாதவர்கள் வேப்பம் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது, எண்ணெய் இல்லாமல் தலைக்கு குளித்து விடுங்கள். பின்னர், கூந்தலை பகுதி வாரியாக பிரித்து, ஹேர் டை பிரஷ் கொண்டு இந்த விழுதை உச்சந்தலை முழுவதும் நன்றாக பரப்பி விடவும். பிரஷ் இல்லை என்றால், கைகளால் இதை தடவி விடலாம். மீதம் இருக்கும் விழுதை, தொங்கும் முடியில் தேய்த்து விடுங்கள். கை வைக்காமல், சொரியாமல் 30 நிமிடம் ஊற வையுங்கள். இப்போது ஷாம்பு பயன்படுத்தாமல் அப்படியே கூந்தலை வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இப்போது தலையை டவலால் துடைக்கும் போதே பேன் கீழே விழும். வாரம் இரண்டு நாள் இப்படி செய்தால், பேன் முற்றிலும் விழுந்து விடும். இதை நீங்கள் குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், மிளகு மற்றும் இஞ்சிசாறை குறைத்து பயன்படுத்த வேண்டும்.
Read more: அடிக்கடி வாய்ப்புண் வர இது தான் காரணம்; கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..