உங்க குழந்தைங்க வயிறு முட்ட சாப்பிடனுமா? அப்போ உடனே இந்த டிபன் செஞ்சு குடுங்க.. உங்களுக்கே மிச்சம் இருக்காது!!
நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை, பெரும்பாலான வீடுகளில், காலை இரவு உணவு என்றால் அது இட்லி தோசை தான். இப்படி சாப்பிட்ட உணவையே தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு பலருக்கு உணவே வெறுத்து விடும். பெரியவர்களுக்கே சலித்து போய்விடுகிறது என்றால், குழந்தைகளை நாம் சொல்லவா வேண்டுமா? குழந்தைகள் பொதுவாக ஏதாவது புதிய உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அவசரமான காலை நேரங்களிலும், சோர்வான இரவு நேரங்களிலும் என்ன சமைப்பது என்று யோசித்தாலே பாதி டையர்ட் ஆகி விடும்.
இனி அப்படி நீங்கள் சிரமம் பட வேண்டாம். எளிதாக செய்யக்கூடிய டிபன் ஒன்றை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதற்க்கு முதலில் ஒரு பாத்திரத்தில், 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேங்காய் துறுவல் ஆகியவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்று வதக்கி விடுங்கள்..
பின்னர், கோதுமை மாவு, உப்பு சேர்த்து வழக்கம் போல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து விடுங்கள். இப்போது இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, அதை தேய்த்து விடுங்கள். இப்போது முதலில் செய்த மசாலாவை, மாவில் சேர்த்து மூடிக் கொள்ளுங்கள். பின்னர், மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இதனை நன்கு பொறித்து விடுங்கள். இப்போது சுவையான டிபன் தயார்.. கட்டாயம் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்..
Read more: 10 வயசு கம்மியா தெரியனுமா? அப்போ இனி கெமிக்கல் இல்லாத இந்த ஹேர் டை பயன்படுத்துங்க..