தினமும் இந்த ஒரு லட்டு சாப்பிட்டால் போதும்.. உங்க குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பிடிக்காது.
பொதுவாகவே முருங்கை கீரை நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. முருங்கையில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி போன்ற முக்கியமான சத்துக்கள் பல உள்ளது. மேலும் துத்தநாகம், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை முருங்கை கீரையில் காணப்படுகிறது. முருங்கையில் இத்தனை சத்துக்கள் இருந்தாலும், குழந்தைகள் முருங்கையை விரும்பி சாப்பிடுவது இல்லை. இதனால் அவர்களுக்கு பிடித்தவாறு லட்டு போல் செய்து கொடுத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்லாமல், விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி இந்த லட்டை குழந்தைகள் தினமும் ஒன்று சாப்பிட்டாலே சளி, காய்ச்சல் சீக்கிரம் பிடிக்காது. இப்போது இந்த முருங்கை லட்டை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அடுப்பை சிம்மில் வைத்து முருங்கையை வறுக்கவும். இலையில் ஈரப்பதம் இல்லாமல் காய்ந்ததும், அவற்றை எடுத்து தனியாக ஆற வைத்து விடுங்கள். இப்போது அதே கடாயில் பிஸ்தா, பூசணி விதைகள் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவை சேர்த்து வறுக்கவும். பின்னர், உளர் திராட்சையையும் வறுத்து கொள்ளுங்கள். இப்போது வறுத்து வைத்துள்ள முருங்கையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும். இந்த பொடியுடன், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலக்கி விடுங்கள். இப்போது வறுத்த பிஸ்தா, பூசணி விதைகள் மற்றும் திராட்சையை மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். இப்போது இந்தக் கலவையை முருங்கை பொடியில் சேர்த்து, அதனுடன், துருவிய தேங்காய், நெய் ஆகியவை சேர்த்து உருட்டி எடுங்கள் . இந்த லட்டை தினமும் சாப்பிடுவதால் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.
Read more: உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கா? அப்போ உடனே இதை செய்யுங்க..