For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொரியன் ஸ்கின் டோன் வேண்டுமா.? மிஸ் பண்ணாம இந்த பியூட்டி ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க.!

05:15 AM Dec 21, 2023 IST | 1newsnationuser4
கொரியன் ஸ்கின் டோன் வேண்டுமா   மிஸ் பண்ணாம இந்த பியூட்டி ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க
Advertisement

நம் முக அழகு மற்றும் சருமத்தினை பேணி பாதுகாப்பதற்கு பியூட்டி பார்லர் சென்று ஆயிரங்களில் செலவிட வேண்டும் என்று அவசியம் இல்லை இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும் உங்கள் சருமம் தங்கம் போல பொலிவுடன் மின்னும். அப்படிப்பட்ட ஒரு அருமையான ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Advertisement

இந்த பியூட்டி ஜூஸ் செய்வதற்கு 1 கேரட், சிறிது துண்டு இஞ்சி, 1/2 எலுமிச்சை பழம், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் கேரட் மற்றும் இஞ்சியை அவற்றின் தோலை நீக்கி நன்றாக கழுவிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின் இவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளும் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்து வடிகட்டினால் சுவையான மற்றும் சத்தான ஜூஸ் ரெடி. இந்த ஜூசை தினமும் குடித்து வருவதன் மூலம் நம் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். மேலும் இவை கண்களின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜூஸ் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

Tags :
Advertisement