முன் நெற்றியில் கொட்டிய முடி மீண்டும் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெய் தேய்த்து பாருங்கள்.
இன்றைய காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை முடி உதிர்வது தான். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு முன் நெற்றியில் இருக்கும் முடி அதிகம் கொட்டும். இதற்க்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இதற்க்கு என்ன தீர்வு என்று நமக்கு தெரியாது. இதற்காக மருத்துவரிடம் போனால் நமது பர்ஸை காலி செய்யாமல் வீட்டிற்க்கு அனுப்ப மாட்டார்கள். இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இதற்க்கு கட்டாயம் தீர்வு உள்ளது. அதுவும் குறைந்த செலவில். அந்த தீர்வை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
முன் நெற்றியில் கொட்டிய முடி மீண்டும் முளைக்கவும், மீண்டும் கொட்டாமல் இருக்கவும், கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து தேய்த்து பாருங்கள். இந்த எண்ணெய் தயாரிக்க, முதலில் பாத்திரம் ஒன்றில் 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பிறகு ஒரு கைப்பிடி கீழாநெல்லி செடியை பொடியாக நறுக்கி, சூடாகி கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து கீழாநெல்லி எண்ணெயை நன்றாக ஆறவிடவும். அதன் பிறகு ஈரமில்லாத பாட்டிலில் கீழாநெல்லி எண்ணெயை வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.
இப்படி தயாரித்த இந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு அப்ளை செய்து வந்தால், முடி உதிர்வு பிரச்சனை சரியாவது மட்டும் இல்லாமல், முன் நெற்றி பகுதியில் முடி உதிர்வு பிரச்சனை நின்று விடும்.
Read more: சிக்கன் பிரியர்களே எச்சரிக்கை!!! சிக்கனின் இந்தப் பகுதியை சாப்பிடுவதால் வரும் பேராபத்து..